Tuesday, January 25, 2011

விஜய்-சீமான் சந்திப்பு பகலவன் பற்றி ஆலோசனை

பிப்ரவரி 6 ந் தேதி திருச்சியில் நடக்கவிருந்தது விஜய் ரசிகர் மன்ற மாநாடு. "நாங்க எப்ப சொன்னோம் மாநாடு நடக்குதுன்னு" என்று விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும் திருப்பி கேட்கிற அளவுக்கு வதந்திகள் பரவுகின்றன. அது மட்டுமல்ல, விஜய் அவரோட நாற்பதாவது வயசுலதான் அரசியலுக்கு வருவார் என்றும் திட்டவட்டமாக அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் தங்கள் கனவுகளை இன்னும் மூணு வருஷத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்கிடையில் பகலவன் படத்தின் முழு கதையையும் கேட்டு தனது அடுத்த படம் அதுதான் என்ற மூடுக்கு வந்திருக்கிறாராம் விஜய். இப்படத்தின் காஸ்ட்டிங், டெக்னீஷியன்கள் வரைக்கும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. தன்னை சந்தித்த சீமானிடம் எல்லாவற்றையும் பற்றி பேசிய விஜய், கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாராம். இந்த படத்தை ஆரம்பிச்சிட்டா எங்கயும் பிரேக் இல்லாம முடிச்சிரணும். அதுக்கு நீங்க சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேசக் கூடாது. மீண்டும் ஜெயிலுக்கு போகிற நிலைமையும் வரக் கூடாது என்றாராம்.

அவரது நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம் சீமானும்!

No comments:

Post a Comment